மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 400 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement