தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே பயங்கரம் மருமகளின் கள்ளக்காதலனை கொன்று தீவைத்து எரித்த நகராட்சி கவுன்சிலர்: ஒன்றரை வருடங்களுக்கு பின் 2 மகன்களுடன் கைது

மேட்டுப்பாளையம்: மருமகளின் கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்று தீ வைத்து எரித்த நகராட்சி கவுன்சிலர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தனது 2 மகன்களுடன் கைது செய்யப்பட்டார். கோவை மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள தேவைய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (39). ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த ஆரிஸ் (32), தனது நண்பர் கௌதம் (38) என்பவருடன் வந்து “என் அண்ணி சுமையாவும் (29), நீயும் பேசி பழகியதால் தான் எனது அண்ணன் அலாவுதீன் (36) காணாமல் போய்விட்டான்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

தொடர்ந்து அப்துல் ஹக்கீமை ஆரிஸ் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்த வழக்கில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ஆரிஸ், கௌதம் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், அப்துல் ஹக்கீமுக்கும், ஆரிசின் அண்ணன் அலாவுதீனின் மனைவி சுமையாவிற்கும் தகாத உறவு இருந்து வந்ததும், இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்.14 ம் தேதி முதல் அலாவுதீன் மாயமானதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அலாவுதீன் மாயமானது குறித்து பல்வேறு கோணங்களில் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்த மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கார் ஸ்டாண்டில் அலாவுதீன் (36) வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது, பஸ் ஸ்டாண்டில் மேட்டுப்பாளையம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த காரமடை நகராட்சி கவுன்சிலர் ரவிக்குமாரின் (59) இளைய மகன் சரண்குமார் (33) பேக்கரி நடத்தி வந்தார். இவரது கடைக்கு அலாவுதீன் டீ குடிக்க அடிக்கடி சென்று வந்தார். சரண்குமார் இல்லாத நேரத்தில் பேக்கரியை மனைவி பூஜா (27) கவனித்து வந்துள்ளார். அப்போது அங்கு வரும் அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் கள்ளக்காதலர்களாக மாறினர்.

அலாவுதீன் பணத் தேவைக்காக பூஜா பேக்கரியில் இருந்து பணம் எடுத்து கொடுத்ததோடு, பலரிடம் கடன் பெற்று ஜி-பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்த தகாத உறவும், கொடுக்கல் வாங்கல் குறித்து அறிந்த சரண்குமார் மனைவி பூஜாவை கண்டித்துள்ளார். மேலும், பூஜாவை மங்களூருவில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே கடந்த 2024 ஏப்ரல் 14ம் தேதி அலாவுதீன் மாயமான அன்று, அவரை சரண்குமார், அவரது அண்ணன் மணிகண்டன் (35), இவர்களது தந்தையும் கவுன்சிலருமான ரவிக்குமார்(59) ஆகியோர் நேரில் அழைத்து கண்டித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கை கலப்பானது. சரண்குமார், மணிகண்டன், ரவிக்குமார் மூவரும் இணைந்து அலாவுதீனை சரமாரி தாக்கி, கழுத்தை பிடித்து நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், பதற்றமான மூவரும் அலாவுதீனின் சடலத்தை காரில் எடுத்து சென்று காரமடை சாலையில் உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் கோவில் பின்புறம் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். மறுநாள் காலை மூவரும் அங்கு சென்று மீதமிருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவற்றை குப்பைகளை போட்டு எரித்து தடயங்களை முற்றிலும் அழித்து விட்டு தங்களது பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கொலை நடந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அலாவுதீனின் மனைவி சுமையாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே வர, அவரது தம்பி ஆரீஸ் அண்ணன் காணாமல் போனதற்கு அப்துல்ஹக்கீம் தான் காரணமாக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் அலாவுதீன் கொன்று எரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன் மங்களூரில் இருந்து திரும்பிய பூஜாவை நேரில் வரவழைத்து விசாரித்ததில் அலாவுதீனுக்கும், அவருக்கும் இருந்த தொடர்பு குறித்தும், இதனால் அவரது கணவர் சரண்குமார் அலாவுதீனுடன் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

தொடர்ந்து சரண்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அலாவுதீனை சரண்குமார் அண்ணன் மணிகண்டன் தந்தை ரவிக்குமார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து எரித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News