தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பை கண்டித்து கோவையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: ஒன்றிய அரசு மீது செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கோவை: கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததை ஒன்றிய பா.ஜ அரசை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். கோவை தொகுதி எம்.பி., கணபதி ராஜ்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வேட்டி, சட்டை, திருக்குறள் எல்லாம் வேஷமா? மெட்ரோ ரயில் இல்லை என கோவைக்கு துரோகமா? கண்டிக்கிறோம்...கண்டிக்கிறோம்... மெட்ரோ ரயில் திட்டத்தை தடுத்த மோடியை கண்டிக்கிறோம் என்று கோஷம் எழுப்பினர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ‘ஒன்றிய பாஜ அரசு கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு நிதி மற்றும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை அளித்து, ஆசிய வங்கி திட்ட பணிகள் என அனைத்து நிலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 15 மாதம் முன்பு விரிவான திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 15 மாதம் நிலுவையில் வைத்திருந்த விரிவான திட்ட அறிக்கையை தற்போது ஒன்றிய அரசு நிராகரித்து உள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் திட்ட அறிக்கை அனுப்பினால் 5 மாதங்களில் அனுமதி அளிக்கிறது. ஆனால், தற்போது 15 மாதம் முடிந்த நிலையில், அற்ப காரணங்களை கூறி திட்ட அறிக்கையை நிராகரித்து இருப்பது கோவை, மதுரை மக்கள் மீதான பாஜ அரசின் வன்மத்தை காட்டுகிறது.

இந்த திட்டத்தை புறக்கணிக்க மக்கள் தொகையை காரணம் காட்டியுள்ளனர். கோவை மாநகராட்சி 16 லட்சம் மக்கள் தொகையுடன் விரிவடைந்து இருக்கிறது. இதனை புரிந்துகொள்ளாமல் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்து இருக்கிறது. 10 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 2011 மக்கள் தொகையை வைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். முட்டுக்கட்டை போடுவது மோடி. அதற்கு முட்டு கொடுப்பது எடப்பாடி பழனிசாமியாக இருக்கிறார். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயிலை தடுத்து நிறுத்திய ஒன்றிய பாஜ, அடிமை அதிமுகவிற்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சரியான பாடம் கற்றுத்தரப்படும்’ என்றார்.

Advertisement