மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை சொல்கிறார் தமிழிசை
கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மிகவும் தவறானது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் இது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கூடுதல் தகவல்கள் தான் கேட்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்குதான் தரப்பட்டுள்ளன. வந்தே பாரத்தில் ஏற வைக்கும் அரசு மெட்ரோவை கொடுக்காதா? திட்டங்களுக்கு உள்ள வசதிகள் பொறுத்து அனுமதி கொடுப்பார்கள்’ என்றார்.
Advertisement
Advertisement