தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோவுக்கு போட்ட முட்டுக்கட்டையால் தலையில் அடித்துக்கொள்ளும் மலராத கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

முக்கிய நிர்வாகியின் மீதான புகாரை கண்டுகொள்ளாத தலைமையால் அப்செட்டில் இருக்காங்களாமே இலைக்கட்சியினர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொசுவலை மாவட்டத்தில் இலை கட்சியின் செயல்பாடுகள் பெரிதாக இல்லையாம்.. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் தலைமைக்கு போயிருக்கு.. இவ்விஷயத்தில் தலைமையும் பெரிதாக ரியாக்‌ஷன் காட்டவில்லையாம்..

Advertisement

இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், மாஜி அமைச்சருமானவர் முடிவு செய்துள்ளாராம்.. பல்வேறு புகார்கள் சென்றாலும், தன்னிடம் அதுகுறித்து விளக்கமோ எதுவும் கேட்காததால், அந்த முக்கிய நிர்வாகி குஷியில் உள்ளாராம்.. தன்னை மீறி கொசு வலை மாவட்டத்தில் இலை கட்சியில் எதுவும் நடந்து விடாது என்பதில், அவர் நம்பிக்கையோடு உள்ளாராம்..

இதனால் இலை கட்சியின் நிர்வாகிகள் அப்செட்டில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி உயர் அதிகாரியின் கறார் உத்தரவால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் எல்லாமே ஆன்லைன் செக்கப்புல போலீஸ் வெரிபிகேஷன் பெண்டிங்.. என்றுதான் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்துல காக்கி உயர் அதிகாரியாக இருப்பவர் ரொம்ப கறாராக இருக்கிறாராம்...

அதோடு, மாவட்டத்துல பார்க்கும் இடமெல்லாம் அவரின் செல்போன் நம்பரை எழுதி போட்டு உதவி, புகாருக்கு தொடர்பு கொள்ளுங்க என்று பேனரும் வைச்சு இருக்கிறாராம்.. இதனால் காவல் நிலையங்களில் தற்போது கரன்சி, நடமாட்டம் குறைஞ்சு போயிருக்காம்.. அதுலயும் குறிப்பாக பாஸ்போர்ட் விண்ணப்ப விசாரணையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பார்த்துக் கொண்டு இருந்த காக்கிகள் சிலர் ரொம்ப அப்செட் மூடில் இருக்கிறார்களாம்..

எங்க வாயை திறந்து பணத்தை கேட்டா, காக்கி உயர் அதிகாரியின் செல்போனுக்கு டயல் செய்து விடக்கூடுமோ என்ற பயத்துல இப்போது கரன்சி கேட்கிறதே இல்லையாம்.. இதற்கு மாறாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுட்டு இருக்காங்களாம்.. ஆன்லைனில் செக்கப் செய்தால், போலீஸ் வெரிபிகேஷன் பெண்டிங் என்று வருதாம்.. நீண்ட நாட்களாக இப்படியே காட்டுகிறதா பேசிக்கிறாங்க.. நீங்க ஒரு வழில போனா..

நாங்க ஒரு வழில போவோம்.. என்று காக்கி உயர் அதிகாரிக்கே சவால் விடும் வகையில் இந்த பிரச்னை இருக்காம்.. எனவே காக்கி உயர் அதிகாரி ஆய்வு செஞ்சு, பாஸ்போர்ட் வெரிபிகேஷனை சீக்கிரம் முடிக்க சொன்னா... நல்லா இருக்கும் என மக்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இருநூறு தவறுகளில் சிக்கி தவிக்கிறாராமே மாங்கனி ஜெயில் ஆபீசர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சேலத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயில்ல கடந்த ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிப்பாளர் பணியிடம் காலியாகவே இருக்குதாம்.. என்றாலும் இந்த ஊரு ஜெயிலுக்கு அதிகாரிகள் ரொம்ப ஆர்வமாகவே இடமாறுதலில் வர்றாங்களாம்.. ஆனால் சென்னை ஆபீசர் ரொம்பவே கெடுபிடியான ஆளாம்.. இதனால எல்லா ஜெயில் அதிகாரிகளும் மிகுந்த சோகத்துடனேயே இருக்காங்களாம்..

உள்ளே வரும் உணவு பொருட்கள் அனைத்தும் வீடியோ எடுத்து சோதனை செஞ்ச பிறகே உள்ளே போகுதாம்.. இதனால கையை பிசையும் நிலையில் தான் இருக்காங்களாம்.. இதற்கிடையில் மாங்கனி ஜெயிலில் ஆண்டு தணிக்கை நடந்துச்சாம்.. இதற்காக வந்த அதிகாரிகள் அலசி ஆராய்ஞ்சி நடத்திய சோதனையில் 200 தப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாம்..

கைதிகளுக்கு வந்த அரிசி குறைவு, கூடுதல் சம்பளம் வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெறுதல் போன்ற குறைகளை கண்டுபிடிச்சதோடு இந்தாண்டு இறுதிக்குள் எல்லாவறையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கடும் உத்தரவு வந்திருக்காம்.. பதவி உயர்வு பட்டியலில் இருக்கும் பொறுப்பு அதிகாரியாக இருப்பவர் வேலையை துரிதப்படுத்தியிருக்காரு... ஆனால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களோ அதிகாரிக்கு டிமிக்கி கொடுத்துக்கிட்டிருக்காங்களாம்...

இன்றைக்கு வேலைமுடிந்திடும் என கூறிக்கிட்டே லீவு போட்டுட்டு போயிடுறாங்களாம்.. இதற்கு தலைமை ஆபீசில் இருக்கும் அதிகாரி ஒருவர் சப்போர்ட் செய்வதாகவும் சொல்றாங்க.. இதனால் ஒருபக்கம் திணறிக்கிட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கமும் உளவுப்பிரிவு அதிகாரிகளால் கடும்நெருக்கடி ஏற்பட்டிருக்காம்..

ஜெயிலுக்குள்ளாற இருக்கும் கைதிகளிடம் என்ன நடந்தாலும் எங்களிடம் சொல்லணுமுன்னு சொல்வதோடு, வார்டர்களுக்கும் மிரட்டல் இருக்குதாம்.. இப்படியே போனால் தலை தப்பாது.. தூக்கியடிப்பேன் என்பது போன்ற மிரட்டல் இருக்குதாம்.. மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடி விழுவது போல பொறுப்பு அதிகாரியாக இருப்பவருக்கு எல்லா பக்கமும் இடியாகவே இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டதால தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினால் எப்படி பதில் சொல்வது என மலராத கட்சியினர் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத தேசிய கட்சியினர் எங்கு சென்றாலும் வாய் மூடி மவுனியாகி விட்டார்களாமே.. ஒற்றை செங்கல் மதுரை எய்ம்ஸ் போல சமீபத்தில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டிருக்கு..

கல்வி நிதி மானியம் இழுத்தடிப்பு, ரூ.37 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் தராதது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது என மலராத தேசிய கட்சியின் வஞ்சக வலையை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனராம்.. சமீபத்தில் மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ பிரஸ் மீட்டின் போது கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை பற்றி நிருபர்கள் கேட்க, மழுப்பலாக பதில் கூறினாராம்..

சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கைவிரித்து எதிர்க்கட்சியினருக்கு வாயில் மெல்ல அவலை கொடுத்து விட்டோம் என அல்வா மாவட்ட மலராத தேசிய கட்சியினரே தங்களுக்கு தாங்களே தலையில் அடித்து புலம்பிக் கொள்கின்றனராம்.. தேர்தல் பிரசாரத்தின் போது இதுகுறித்து கேள்வி எழுப்பினால் நாம் எப்படி பதில் சொல்வது என அந்த கட்சியினர் மத்தியில் பரபரப்பான விவாதம் நடக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement