மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
05:44 PM Oct 09, 2024 IST
Share
Advertisement
சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது. சேத்துப்பட்டில் இருந்து கடந்தாண்டு செப்டம்பரில் பாலாறு என்ற இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. சிறுவாணி என்ற இயந்திரம். மூலமும் பாலாறு என்ற இயந்திரம் மூலமும் சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சுரங்க வழித்தடத்தின் நீளமும் 708 மீட்டர் ஆகும்.