தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீட்டர்கேஜ் காலத்தில் இயக்கிய ரயில்கள் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு இயக்க வேண்டும்

Advertisement

மானாமதுரை : இந்தியாவின் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்கள், அகலப்பாதையான பின் நிறுத்தப்பட்டதால் ஆன்மிக சுற்றுலா தலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ராமேஸ்வரம் உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். இதை தவிர ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, தேவிபட்டினம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அரியமான் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கொண்டுள்ள பகுதியாகும்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீட்டர்கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும், அகலப் பாதையாக மாற்றம் செய்வதற்காக நிறுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. அகலப்பாதையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்று வரை பழைய தடத்தில் ஓடிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் தரப்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இன்று வரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இயக்கப்பட்ட ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.  ராமேஸ்வரத்திற்கு காலை, இரவு இயக்கப்பட்ட பாலக்காடு ரயிலும் மீண்டும் இயக்கப்பட வில்லை. புனலுார்-மதுரைக்கு இயக்கப்படும் ரயில் மதுரைக்கு காலை 5 மணிக்கு வந்து இரவு 11:45 மணிக்கு தான் மீண்டும் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இது மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் பயனடைவார்கள். அதேபோல் மதுரையில் இருந்து குருவாயூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் கேரள பயணிகளுக்கும், தமிழக பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதேபோன்று மதுரையில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் மதுரை மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (22102/103), மதுரை சண்டிகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்கள்:20493/94) ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள்.

தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி, கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் பயணிகள் சங்கத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் கெங்காதரன் கூறுகையில், ‘‘மீட்டர் கேஜ் காலத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை,கோவை, பாலக்காடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டன. அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகும் ஏற்கனவே இயக்கப்பட்ட சில ரயில்களை மீண்டும் இயக்காமல் இருந்தனர். பின்னர் பாம்பனில் புதிய பாலம் திறக்கப்பட்டதும் இயக்கப்படும் என்ற நிலையில் பாலம் திறந்து 6 மாதங்களான பின்னரும் ரயில்வே வாரியம் அறிவித்த மங்களூரு, ஜோத்பூர், மால்டா, சார்லபள்ளி போன்ற நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அறிவிக்கப்பட்ட ரயில்களை இயக்கவில்லை.

தற்போது ராமநாதபுரம்-ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ள நிலையில் இனிமேலாவது ஏற்கனவே இயக்கப்பட்ட கோவை, பாலக்காடு ரயில்களை இயக்க வேண்டும். இதுதவிர தினசரி ரயில்களான புனலூர், குருவாயூர், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்களை ராமேஸ்வரத்தில் இருந்து இயக்க வேண்டும். மேலும் காச்சிகுடா, சண்டிகர், மும்பையில் இருந்து மதுரை வரை வரும் வாராந்திர ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். தெற்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்று ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Advertisement