வானிலை ஆய்வு மையம் தகவல்; தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்
Advertisement
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்றைய தினம் தமிழகத்தின் 5 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் 106.7 டிகிரி பாரான்ஹீட், மதுரை 104.36 டிகிரி பாரான்ஹீட், ஈரோடு 101.48 டிகிரி பாரான்ஹீட், பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டையில் 100.4 டிகிரி பாரான்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.
Advertisement