மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63, ஜிடி 63 புரோ
Advertisement
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், புதிய ஏஎம்ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார்களில் 4.0 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. ஏஎம்ஜி ஜிடி 63யில் இந்த இன்ஜின் 585 பிஎச்பி பவரையும் 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஜிடி 63 புரோவில் இது 612 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் பிளஸ் ஆல்வீல் டிரைவ் இடம் பெற்றுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை ஜிடி 63 3.2 நொடிகளிலும் எட்டும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.3 கோடி.
Advertisement