14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி வெற்றிக் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டை பொறுத்தவரை விளையாட்டை வளர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஹாக்கி இளையோர் 14வது உலக கோப்பை தொடருக்கான கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் உலகக் கோப்பை போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாட்டில், இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 24 அணிகள் 6 பிரிவுகளாகப் போட்டியிடுகின்றன. ‘பி’ பிரிவில் சிலி, இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் விலகியதால், ஓமன் அணி சேர்க்கப்பட்டுள்ளது.