ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் இந்தியா-அமெரிக்கா மோதல்
துபாய்: 19 வயதுக்குட்படோருக்கான 16வது ஐசிசி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்வரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நம்பியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது. 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.
அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை. பி பிரிவில், இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, நியூசிலாந்து. சி பிரிவில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து. டி பிரிவில், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா, தென் ஆப்ரிக்கா. 5 முறை சாம்பியனான இந்திய அணி ஜன.15ம் தேதி புலவாயோவில் நடக்கும் தொடக்க போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. 17ம் தேதி வங்கதேசத்துடனும், 24ம் தேதி நியூசிலாந்துடனும் மோதுகிறது.