மேல்மலையனூர் அருகே கடன் பிரச்சினையில் கடத்தப்பட்ட பைனான்சியர் மீட்பு..!!
விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே கடன் பிரச்சினையில் கடத்தப்பட்ட பைனான்சியர் மீட்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வளத்தியில் சாய் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருபவர் சிவா. இவர் வீட்டுக்கு காரில் வந்த கும்பல் இன்று காலை அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து வந்துள்ளனர். அவரும் அவருடைய காரில் வந்துள்ளார். திடீரென பைனான்சியர் சிவாவை 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவருடைய காரையும் கடத்தி சென்றனர். பைனான்சியர் சிவா கடத்தப்பட்டது குறித்து வளத்தி காவல் நிலையத்துக்கு தெரியவர போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் பின் தொடர்ந்து வந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அந்த வாகனத்தை பிடிப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கடத்தி வரப்பட்ட வாகனம் விழுப்புரம் நகரத்தில் சிக்னல் அருகே தவறான பாதையில் எதிர்திசையில் வந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு அதிவேகத்தில் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை விடாமல் துரத்து போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். அந்த காரில் சென்ற கும்பல் நிதி நிறுவனம் நடத்தி வரும் பைனான்சியர் சிவாவை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் ஜானகி புறம் என்ற இடத்தில் பைனான்சியர் சிவாவை காரில் இருந்து இறக்கிவிட்டு, வேறொரு காரில் கும்பல் தப்பியோடியது. விழுப்புரத்தில் கடத்தல் கும்பலை மடக்கி பிடிக்க போலீசார் சுற்றிவளைத்த நிலையில் அவர்கள் தப்பியோடினர்.