தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகதாது அணை வழக்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

Advertisement

உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வெளிவந்ததால், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பணிகளை தொடங்கி விட்டது. தமிழ்நாடு அரசு,உச்ச நீதிமன்றத்தில்,தீர்ப்பை மறு ஆய்வு செய்திட வலியுறுத்தி . சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவில் வெளியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் இது என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருப்பது நியாயமானது.

இந்த தீர்ப்பு வந்த உடனேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில அளவில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். எனவே தமிழக முதல்வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம். காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணையை கட்டிட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முதலில் ஒன்றிய அரசின் நீர்வளத் துறையிடம் அனுமதி கோரியது ..

ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இதற்கான அறிக்கை கொடுத்து அனுமதி கோரியது... இத்துறையும் விரிவான அறிக்கையை கர்நாடக அரசிடம் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆணையக்கூட்டத்தில் இதை விவாதப்பொருளில் சேர்த்து விவாதித்திடும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து இருந்ததை.... தமிழகத்தின் எதிர்ப்பால்,,தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் காவிரி ஆணையம் ஒத்தி வைத்தது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தமிழ்நாடு அரசின் சார்பாக பங்கு கொண்ட நமது உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து முறியடித்தனர்.

இதன் பின் தான்... காவிரி ஆணையக்கூட்டத்தில் மேகதாதுஅணைக்கான அறிக்கையை விவாதித்திட , காவிரி ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை கர்நாடகம் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வாதாடிய நிலையிலும்,, காவேரி ஆணையக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது....

என்பது தமிழகத்திற்கான அநீதியாகும்.இதற்கு முன்னேயே காவேரி ஆணையமும், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில்.. இந்த தீர்ப்பு விரைவாக மேகதாது அணை கட்டுமானத்திற்கான அனுமதி யாக கருதி, கர்நாடக அரசு இதற்கான செயல்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே மறு சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Advertisement

Related News