தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தொழில் தொடங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடந்த மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

Advertisement

வெளிநாடுகளுக்கு வரும்போது, அயலக மண்ணில், தமிழை கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும். இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு டிராவல் செய்த உணர்வு ஏற்படுகிறது. அயலகத் தமிழர் நலவாரியம். அயலகத் தமிழர்களுக்கான டோல்-ப்ரீ ஹெல்ப்லைன், அதேபோன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷுரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று, எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிடுகிறவர்களின் குடும்பத்திற்கு, நிதியுதவியும், பென்ஷனும் வழங்குகிறோம். இப்படி பார்த்து பார்த்து செய்து தருவதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம். இதை கேட்கும்போது வெளிநாடுகளில் அல்லல்படுகின்ற யாராவது ஒருவருக்கு நம்பிக்கை பிறக்கும்; அவர்களுக்கும் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் சொல்கிறேன்.

இப்போது நான் சொன்ன முன்னெடுப்புகள் எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், வேர்களைத் தேடித் திட்டம். வெளிநாடுகளிலேயே செட்டில் ஆகிவிட்ட சிலர், ‘மண்ணை விட்டு பிரிந்து தூர தேசத்துக்கு வந்துவிட்டோமே, இனி இந்த சொந்தம் அவ்வளவுதானா’ என்று உங்களுக்குள்ளே நிச்சயம் இது ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுடைய குழந்தைகளை, மாணவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய மரபின் வேர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம். 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், இதுவரைக்கும் 15 நாடுகளில் இருந்து 292 பேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பலர், சில தலைமுறைகளாக விட்டுப் போன சொந்தங்களை தேடி கண்டுபிடித்து உருகியிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், அவர்கள் மனதில் தேங்கி நின்ற பாசமும்தான் இந்த திட்டத்தின் நோக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன்.

‘வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும்!’ இதுதான் திராவிட மாடல் அரசின் மோட்டோ. இதற்காகத்தான் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அரசின் திட்டங்களை நாம் ஏற்படுத்தி தருகின்ற வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம், உங்கள் மீது இருக்கின்ற அன்போடும், உரிமையோடும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். எப்போதுமே எங்கேயாவது முதலமைச்சர் சென்றால், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் என்னிடம் ஒரு கோரிக்கையை வைப்பார்கள். ஆனால், நான் முதலமைச்சராக இருந்து உங்களிடத்தில் இப்போது ஒரு கோரிக்கையை வைக்க வந்திருக்கிறேன். ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

உலக நாடுகளை குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பார்ப்பவர்கள் நீங்கள். இதுபோல தமிழ்நாடும் வளர வேண்டும் என்று நான் நினைப்பது போல தான் நீங்களும் நிச்சயமாக நினைப்பீர்கள். என்னைவிட அதிகமாகதான் நினைப்பீர்கள். எனவே, உங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள் - செய்வீர்கள் - செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள், சிறியதாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலை தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளை பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.

உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அங்கே படிக்கின்ற நம்முடைய அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஏழை - எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள்.

இந்த பூமிப்பந்து முழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும், தமிழர் என்ற அடையாளத்தை விடாதீர்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள்; தமிழை மறக்காதீர்கள்; தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள்.

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தை பாருங்கள். நம்முடைய பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் உலகம் என்று ஏராளமான இடங்கள் இருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் உறவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கிறேன். குடும்பத்துடன் இங்கே வந்து, இந்த மறக்க முடியாத வரவேற்பை கொடுத்திருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஜெர்மனிக்கான இந்திய தூதரகத்தில் இருந்து அபிஷேக் துபே, தமிழக அரசு செயலாளர்கள் அருண் ராய், தாரேஷ் அகமது, வெளிநாடு வாழ் இந்திய தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள், ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாட்டில் இருந்து தமிழர்கள், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News