தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்.17 முதல் 28 வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36,353 பயன்

 

Advertisement

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு அக்.17 முதல் 28 வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப்பயனாளர்கள் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவண்ணம் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பொது மக்களுக்கு நோய்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை 627 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 36,353 மருத்துவப்பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், இன்று திருவொற்றியூர் மண்டலத்தில் 3 முகாம்கள், மணலி மண்டலத்தில் 3 முகாம்கள், மாதாவரம் மண்டலத்தில் 3 முகாம்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4 முகாம்கள், இராயபுரம் மண்டலத்தில் 3 முகாம்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 9 முகாம்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 10 முகாம்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 21 முகாம்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 முகாம்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 9 முகாம்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 3 முகாம்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 12 முகாம்கள், அடையார் மண்டலத்தில் 13 முகாம்கள், பெருங்குடி மண்டலத்தில் 11 முகாம்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. மழைக்கால மருத்துவச்சிறப்பு முகாம்கள் வாயிலாக பெரும்பாலான மருத்துவ பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News