சென்னை மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை: 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஒரு வருட காலத்திற்கான காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாத காலியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த பாடப்பிரிவிகளில் பயில, விண்ணப்பத்தாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த சான்றிதழ் வகுப்புகளில் சேர அந்தந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை முதல்வரை நேரில் வருகிற 14ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.