மதுரை: சேலம் கல்லூரியில் இருந்து குமரி மருத்துவக் கல்லூரிக்கு முதுகலை மாணவியை இடமாற்றம் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. குமரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா சேலம் தனியார் கல்லூரியில் இருந்து இடமாற்றம் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். சேலம் தனியார் கல்லூரியில் உரிய கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும், வகுப்புகள் நடப்பதில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்தில் மாணவியை இடமாற்றம் செய்ய எம்ஜிஆர் பல்கலை பதிவாளர், தேர்ச்சிக் குழு செயலாளருக்கு ஆணையிட்டது. இடமாற்றம் செய்யப்படும் கல்லூரியில் நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை மாணவி செலுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், மாணவி பயிலும் கல்லூரியில் அவருக்கு உகந்த சூழல் இல்லாததால் இடமாற்றம் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.