இயற்கை, யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான மருத்துவ தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ரத்து..!!
Advertisement
சென்னை: இயற்கை, யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறை முடிந்த பின், காலியிடங்கள் எண்ணிக்கையை 35லிருந்து 54ஆக அதிகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அவசர சூழ்நிலைகளின்போது காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நீதிபதி தெரிவித்த நிலையில், தற்போது அசாதாரண சூழல் இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்தது. மருத்துவர்கள் சித்தார்த், அண்ணாமலை, அமிர்த செல்வராஜன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டது.
Advertisement