திமிரி அடுத்த காவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
கலவை : திமிரி அடுத்த காவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சமூக ஆர்வலரும் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியுமான ஆர்.சேட்டு, தலைமை தாங்கினார்.
காவனூர் திமுக கிளை கழக செயலாளர் வடமலை, திமுக பிரமுகர் மகி என்கின்ற மகேந்திரன், காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார். இதில் சாம்பசிவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், எல்இடி டிவியும், காவனூர் வணிகர் சங்க செயலாளரும் காவனூர் பச்சையம்மாள் பாத்திரக்கடை உரிமையாளருமான சி. மோகனரங்கத்திடம் 5 அடி பீரோ, காவனூர் திமுக பிரமுகர் மகேந்திரன் காவனூர் அடகு கடை உரிமையாளர் சென்னாரம் ஜெயின் 5 அடி பீரோ மேலும் மருத்துவமனை லேப் டெக்னீசியன்கள் பயன்படுத்த ரத்த மாதிரி சேமிப்பு வைக்க ரேக்கை காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியின் நிர்வாகி ஆர்.சேட்டு, வழங்கினார்.
மொத்தம் ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவமனைக்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி, கலந்துகொண்டு மருத்துவ செவிலியரிடம் வழங்கினார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர், காவனூர் வணிகர் சங்கத் தலைவர் உமாபதி, காவனூர் சார்லஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமுக கிளை செயலாளர் பி.வடமலை, நன்றி கூறினார்.