தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மருத்துவ துணைப் படிப்பு.. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: நடப்பு கல்வியாண்டு முதலே அமல்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2023-24ம் கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று நடப்பு கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு அல்லாத உயர்கல்விகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங், உயிரியல் சார்ந்த துணை மருத்துவப்படிப்பு, பட்டயபடிப்புகள், மருந்தகம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகளில் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரலாம்.

இதற்கு தகுதி பெற மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். அந்த வகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை காமராஜர் கல்வி நிதியின் கீழ் அரசே ஏற்கும். சமூக நிதி மற்றும் நிர்வாக கொள்கைகளுக்கு இணங்க உயர்கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.