தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மெடல் நகர் தொகுதிக்கு அடிபோடும் நாட்டாமை நடிகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ரூ.10 கோடி கொடுத்த அப்புறமும் போக்குவரத்து அலுவலகம் கட்டும் பஞ்சாயத்து முடிவுக்கு வரலையாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘மான்செஸ்டர் மாநகரில் உள்ள ஆத்துப்பாலத்துல புதுசா மேம்பாலம் கட்டி திறந்தாங்க.. இந்த மேம்பாலம் கட்டறப்போ, போக்குவரத்து கழக நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடிச்சுட்டாங்க.. அதற்கு பதிலா புதுசா நெடுஞ்சாலைத்துறை கட்டிடம் கட்டி தரணும்னு ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருந்தாங்களாம்.. ஆனா, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிங்க நாங்க கட்டிடம் கட்டி தர மாட்டோம்.

அதுக்கு பதிலா 10 கோடி ரூபாய் தர்றோம், அந்த தொகையில் கட்டிடம் கட்டிக்கலாம்னு சொல்லிட்டாங்களாம்.. போக்குவரத்து கழகம் நேரடியா கட்டிடம் கட்ட அனுமதி கிடையாதாம்.. அதனால பொதுப்பணித்துறை மூலமாக கட்டிடம் கட்ட சொன்னாங்களாம்.. பொதுப்பணித்துறைக்கு 10 கோடி அனுப்பி வச்சிட்டு, கடமையை முடிச்சுக்கிச்சாம் நெடுஞ்சாலைத்துறை. பொதுப்பணித்துறையும் கட்டிடம் கட்ட பூமி பூஜை போட்டு வேலையை தொடங்க தயாரா இருந்தாங்களாம்.. அந்த நேரத்தில், போக்குவரத்து கழக டிப்ேபா இருக்கிற இடம் ஆக்கிரமிப்புல இருக்கு..

குளக்கரை மேல டிப்போ வெச்சிட்டு இருந்தா அதுல எப்படி நாங்க கட்டிடம் கட்டுறது, அப்படி கட்டுனா நாங்க ஆடிட்டிங்ல மாட்டிக்குவோம்னு சொல்லி திட்ட பணியை நிறுத்திட்டாங்களாம்.. அலுவலகம் கட்டற பஞ்சாயத்து ரொம்ப மாசமா நடக்குதாம்.. இதனால், அந்த 10 கோடி ரூபாயை என்ன செய்யறதுன்னு 3 துறை ஆபீசர்களும் கலந்து பேசினாங்களாம்.. கடைசில எந்த முடிவும் எடுக்காம பணத்தை போக்குவரத்து கழகத்திற்கு தந்துட்டாங்களாம்.. அவுங்க பணத்தை வாங்கி வெச்சிட்டு எந்த கட்டிடமும் கட்டலையாம்..

இப்ப நிர்வாக அலுவலக கட்டிடம் வருமா, வராதானு யாருக்கும் தெரியாத நிலைமை இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் அணியில் மாவட்ட செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள் கட்சி தாவ முடிவு செய்திருக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் உள்ள அடைமொழியுடன் பெயரை கொண்ட மாவட்ட செயலாளர், தற்போது தனது நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்காராம்.. அரசியல் ரீதியாக முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசியிருக்காரு.

மிக விரைவில் முக்கிய முடிவும் எடுக்க இருக்கிறாராம். மாவட்ட செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள் கட்சி தாவுதற்கான வேலையும் திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து வரும் முக்கிய நிர்வாகியான மாவட்ட செயலாளரும் இந்த அதிரடி முடிவு எடுத்து விட்டால், டெக்ஸ்டைல் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியினர் கூடாரம் காலியாகி விடும் என அரசல் புரசலாக தேனிக்காரர் அணியில் பேசிக்கிறராங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மெடல் மாவட்ட மலராத கட்சி கூட்டணியில் நாட்டாமை நடிகரால் ஒரே புகைச்சலாமே..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘மெடல் தொகுதியில் வரவுள்ள தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் மலராத கட்சிக்கு தான் சீட் என அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல். அதுவும் மாவட்ட தலைவராக உள்ளவருக்குத்தான் சீட் என்றும் கூறப்படுவதால், அவர் தரப்பு இப்போதே கவனமாக காய் நகர்த்தி வருகிறது. அதேநேரம் நாட்டாமை நடிகரோ, மெடல் தொகுதி நமக்குத்தான். இப்போதே தேர்தல் வேலையை துவங்கலாம் என அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

ஏற்கனவே மாவட்ட தலைவர் தரப்பு வேலை பார்த்து வரும் நிலையில், நாம் எப்படி திடீரென எதிராக போய் வேலை பார்க்க முடியும் என ஆதரவாளர்கள் கூற, நமது தரப்பை சேர்ந்தவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வாங்கியது போல, தொகுதியும் நமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளாராம் நாட்டாமை நடிகர். இதைக் கேட்ட அவரது ஆதரவாளர்கள், எம்பி தேர்தலில் நாட்டாமை மனைவிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லக்கூட வரலைனாலும் பரவாயில்லை... நன்றி என போஸ்டர் கூட அடித்து ஒட்டவில்லை.

நம்ம நிலைமை இப்படி இருக்கும்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் வேலை செய்வது என நாட்டாமை தரப்பினர் புலம்பி வருகின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரர் விவகாரம் என்ன...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் உத்தரவுக்கு புதிய அல்வாக்காரர் அடிபணிந்து கிடக்கிறாராம். மலராத கட்சியோடு கூட்டணியில் இருக்க வேண்டுமானால் தேனிக்காரரிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். பிரதமர், உள்துறை என யார் வந்தாலும் அவரை பார்க்க விடக்கூடாது, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இலைக்கட்சி தலைவர் கறாராக சொல்லிட்டாராம்.

இதனை தலைதாழ்த்தி ஏத்துக்கிட்ட மலராத கட்சியின் மாநில அல்வாக்காரர், தேனிக்காரரிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திட்டாராம்.. ஆனால் பதவி ஏற்கும்போது தான் ஒரு தென்றல் என்றாரேன்னு நினைத்த தேனிக்காரர் செல்போனில் அழைத்தும் எடுக்காத நிலையில், 2 முறை குறுந்தகவலும் அனுப்பியிருக்காரு.. ஆனால் அப்படி எதுவுமே இல்லை என மறுத்திருக்காரு அல்வாக்காரர்.. ஆனால் நடந்தது உண்மையென ஆதாரத்துடன் தேனிக்காரர் வெளியிட்டதும் ரொம்பவே வெக்கப்பட்டு போனாராம் அல்வாக்காரர்..

நாம் என்ன சொன்னாலும் அமைதியாக இருப்பாருன்னு நாடிபிடித்து பார்த்தது போல தேனிக்காரரை நினைத்தாராம் அல்வாக்காரர்.. ஆனால் பொய் சொல்வதில் மாஜி போலீஸ்காரரை மிஞ்சிடுவாருன்னு தேனிக்காரரின் அடிப்பொடிகள் அல்வாக்காரரை சொல்றாங்க.. அதே நேரத்தில் அல்வாக்காரரின் நடவடிக்கையால் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்காராம்.. அவரை கூல்படுத்தும் வேலைகளை ரெண்டாங்கட்ட இலைக்கட்சி மாஜிக்கள் தொடர்ந்து செய்றாங்களாம்.. விவசாயி... என்ற பாடலை அப்படியே எடப்பாடின்னு..

பாட வச்சிருக்காங்க.. ஆனால் நன்றாக பாட்டுப்பாடும் இளைஞரோ இலைக்கட்சி தலைவரை எம்ஜிஆராக நினைத்து அவரால் பாடவே முடியலையாம்.. இந்த கூத்தும் நடந்துக்கிட்டு தான் இருக்குன்னு தேனிக்காரரின் ஆட்கள் சிரிப்பாய் சிரிக்காங்களாம்.. ஆனால் அல்வாக்காரர் கொடுத்த அவமானத்தில் தேனிக்காரருக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்காம்..

அதாவது வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் இலைசின்னத்தின் சார்பில் போட்டியிட ரகசியமாய் முடிவு செஞ்சியிருக்காராம். சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்துக்கிட்டிருக்கு. இதனால் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் இருப்பதால் ஏ பார்ம், பி பார்மில் நான் தான் கையெழுத்து போடப்போகிறேன் எனவும் அவர் கூறிவருவதாக அவரது அடிப்பொடிகள் சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

Related News