மெக்கானிக் வீட்டில் கொள்ளையடித்து விட்டு ஹாயாக சாப்பிட்டுச் சென்ற திருடர்கள்: திருச்சி அருகே பரபரப்பு
Advertisement
பின்னர் வீட்டின் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த உணவுகளை பாத்திரத்துடன் எடுத்துக்கொண்டு தப்பினர். இன்று அதிகாலை இளஞ்செழியன் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோக்கள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோக்களில் இருந்த நகையும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அருகே உள்ள வயலில் உட்கார்ந்து உணவை சாப்பிட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Advertisement