சென்னை: வடசென்னையில் இறைச்சிக்காக சிலர் பூனைகளை பிடித்துச் சென்று விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. பூனைகளை செல்லப்பிராணியாக வளர்ப்போர், போலீசில் புகார் அளித்துள்ளனர். திருவொற்றியூர் பகுதியில் ஏராளமான பூனைகளை இளைஞர்கள் சிலர் பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் ஓரம் வசிக்கும் இளைஞர்கள், பூனைகளை சாலையோர கடைகளுக்கு கறியாக்கி விற்கின்றனர். சாலையோர கடைகளில் பூனைக்கறியை சிக்கன், மட்டன் என்று கூறி விற்கப்படுவதாக பூனைகளை வளர்ப்போர் புகார் தெரிவித்தனர்.