சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மதிமுக அலுவலகம் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய நபர் குறித்து கட்சி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளித்துள்ளது. மதிமுக அலுவலகத்தின் உள்ளே இருந்த மின்விசிறி உள்ளிட்டவற்றை மர்ம நபர் சேதப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சீருடையில் வந்து தாக்குதல் நடத்தியதால், தீயணைப்புத்துறையில் உள்ளாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.