மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திடீர் உடல்நல குறைவு: மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி, இருமல் பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டார். உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் நேற்று வைகோ பங்கேற்பதாக இருந்தது.
Advertisement
ஆனால் அதற்கு முன்பாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வைகோ வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement