திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து 2018 மே 19ம் தேதி மதிமுக பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அடுத்தடுத்து வெளியே வந்தனர். அப்போது அவர்களை வரவேற்க காத்திருந்த இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார், மதிமுகவை சேர்ந்த 5 பேர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் விசாரித்து சீமான் உள்பட 19 பேரையும் விடுவித்து நேற்று தீர்ப்பளித்தார்.