தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு

 

Advertisement

சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கபட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம். மல்லை சத்யா ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் நிரந்தரமாக நீக்கபட்டுள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கபட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி விளக்கம் கேட்டு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து மல்லை சத்யா உரிய விளக்கம் அளிக்கவில்லை. பொதுவெளியில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வந்ததால் நீக்கபட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மல்லை சத்யா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Advertisement

Related News