புதிதாக 75,000 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நட்டா
10:01 AM Jun 04, 2025 IST
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 75,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான இடங்களை 45,000ல் இருந்து 1.18 லட்சமாக அதிகரித்தோம் என்றும் தற்போது மேலும் 75,000 எம்.பி.பி.எஸ். இடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.