சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜுலை 21ல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு www.mcc.nic.in இணையதளத்தில் ஜூலை 21ல் ஆன்லைனில் தொடக்கம். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஜூலை 21 முதல் 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஜூலை 29, 30ல் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஜூலை 31ல் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 1 -6க்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். 2ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 12ம் தேதியும் 3ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 22ல் தொடங்குகிறது.