எம்பிபிஎஸ் சேர்க்கை மோசடி காஷ்மீரில் 6 இடங்களில் ரெய்டு
ஸ்ரீநகர்: வங்கதேசத்தைச் சேர்ந்த் போலியாக எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்கியதாக 4 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ சேர்க்கை வழங்குவதாக கூறி இவர்கள் அதிக அளவில் பணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் எந்த மருத்துவ கல்லூரிக்கும் பணம் மாற்றப்படவில்லை. முதல் கட்ட விசாரணையில் மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது. இதன்படி தண்டனைக்குரிய மோசடி மற்றும் குற்றவியல் சதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆறு இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement