எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை
புனே: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பி.ஜே.அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். அங்குள்ள கல்லூரி விடுதியில் 2 மாணவிகளுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை, வெகுநேரம் மாணவி விடுதிக்கு வராததால் சக மாணவிகள் செல்போனில் தொடர்புகொண்டனர். அந்த மாணவி, போனை எடுத்து பேசவில்லை. உடனே போலீசில் புகார் செய்ய முயன்றனர். இதற்கிடையே அந்த விடுதியின் மற்றொரு அறையில் அந்த மாணவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே விடுதி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தான் மனநல சிகிச்சை பெற்றுவருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.