எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு வரும் 30ம்தேதி கலந்தாய்வு: அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஜூன் மாதம் 6ம் தேதியிலிருந்து ஜூன் 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த விண்ணப்பங்களில் ஒரு சில விண்ணப்பங்கள் சான்றிதழ்களை இணைக்க மறந்து விண்ணப்பத்திருப்பார்கள், அவர்களுக்கான கால அவகாசம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு நாட்களில் எந்தெந்த மாணவன் எந்தெந்த சான்றிதழ்களை இணைக்கவில்லையோ அதனை இணைப்பதற்குரிய கால அவகாசமாக 2 நாட்கள் தரப்பட்டது. வழங்கப்பட்டிருக்கும் 2 நாட்களில் சான்றிதழ்களை இணைத்து மீண்டும் தந்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்படும். தகுதி பட்டியல் சரிபார்க்கப்பட்டிருக்கும்போது 20 பேருடைய போலிச் சான்றிதழ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறது. 3 வருடங்களுக்கு கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர இருக்கிறது. வருகிறது. அவர்களுக்கும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.
ஒன்றிய அரசின் கால அட்டவணைப்படி வரும் 30ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.