எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பி உள்ளது. பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 7,513 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 2,004 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பியுள்ளன. ஏற்கனவே, 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 613 இடங்கள், சிறப்பு பிரிவில் 86 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள இடங்கள், முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் 2ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன. மகளுடன் சேர்ந்து படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசியை சேர்ந்த 49 வயது பெண், எம்பிபிஎஸ் படிக்க விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்த நிலையில், அவரது மகள் சம்யுக்தா கிருபாளினிக்கு கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.