தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக புதிய கொறடாவாக மயிலம் சிவகுமார் தேர்வு: வழக்கறிஞர் பாலு பேட்டி

Advertisement

சென்னை: பாமக புதிய கொறடாவாக மயிலம் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

அந்த வகையில், ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ., அருளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். ஆனால் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த நிலையில், பா.ம.க., கொறடா பதவியில் இருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்தனர். அன்புமணி சார்பில் பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் பாலு; கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாமக சட்டப் பேரவை கொறடா அருள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும் கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. 1995ல் கட்சி விதிகள் வகுக்கப்பட்டு பாமக செயல்பட்டு வருகிறது. பாமகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்.

பாமக கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்தான் கூட்ட முடியும். தேர்தல் ஆணையம் அளித்த அங்கீகாரப்படி தலைவர், பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவர் அன்புமணிதான் என்று கூறினார்.

Advertisement