மயிலாடுதுறை ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்டிஓ அலுவலக கட்டிடம்
மயிலாடுதுறை : மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அரசாணை மூலம் ரூபாய் 3.90 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேற்படி அரசாணையின்படி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் தரைதளத்தில் 4203.93 ச.அடி(390.70 ச.மீ)பரப்பளவிலும், முதல்தளத்தில் 4203.93 ச.அடி (390.70 ச.மீ)பரப்பளவிலும் மொத்தம் 8407.878.அடி (781.40 ச.மீ) பரப்பளவில் இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
மேலும் தரை தளம் ஒன்றில் துணை கலெக்டர் அறை, நீதிமன்ற அறை, மின்சார அறை, லிஃப்ட், அலுவலக அறை, பெண் பணியாளர் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, நுழைவு லாபி, படிகள், உணவு அறை, தனிப்பட்ட உதவியாளர் அறை, போர்டிகோ மற்றும் முதல் தளத்தில் பதிவு அறை1, கணினி அறை, பதிவு அறை 2, ஆண் பணியாளர் கழிப்பறை, மின்சார அறை, லிஃட் லாபி, படிக்கட்டு படிகள், சந்திப்பு அறை என இரண்டு தளங்கள் மற்றும் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட உள்ளது.
ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை வகிக்க, எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜகுமார ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ உமாமகேஷ்வரி.
ஆர்டிஓ (பொ) அர்ச்சனா, நகர்மன்ற தலைவர் செல்வராஜ். நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி நர்மதா ஆகியோர் கலந்து கொண்டனர்.