மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக மோன்தா கரையை கடக்கும்!
காக்கிநாடா: மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக மோன்தா கரையை கடக்கும். மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 100 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தெற்கு, தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் மோன்தா புயல் நகர்ந்து வருகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் மோன்தா தீவிர புயல் நகர்கிறது.
Advertisement
Advertisement