மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி: சென்னை வீரர் அரவிந்த் நயினாருக்கு வெண்கலம்
சென்னை: மாஸ்டர்ஸ் உலக நீச்சல் போட்டியில் சென்னை வீரர் அரவிந்த் நயினார் வெண்கலப் பதக்கம் வென்றார். மாஸ்டர்ஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. 30 முதல் 34 வயதுக்குட்பவட்டவர்களுக்கான நீச்சல் போட்டியில் வீரர் அரவிந்த் நயினார் பங்கேற்றார். சென்னை வீரர் அரவிந்த் நயினார் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 30 முதல் 34 வயதுக்குட்பட்டோருக்கான 200 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.