ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாபெரும் தூய்மை பணி
Advertisement
*800 கிலோ பிளாஸ்டிக் குப்பை அகற்றம்
உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், மாபெரும் தூய்மைப் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. புலிகள் காப்பகத்தின் திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட அமராவதி ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் வரை சாலையின் இருபுறமும் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வித்யாசாகர் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 65 பேர் அகற்றினர்.
இதேபோல், திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏவிபி கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.டபிள்யூடபிள்யூஎப், நேச்சர் சொசைட்டி, பேரூராட்சி, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து இந்த பணி நடைபெற்றது. மொத்தம் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருப்பூர் கோட்ட துணை இயக்குநர் தெரிவித்தார்.
Advertisement