மாருதி சுசூகி எர்டிகா
மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் எர்டிகா காரில் 6 ஏர் பேக்குகளை ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சமாக அறிமுகம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, மாருதி எக்ஸ்எல்6 வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளன. எக்ஸ்எல்6 ஜெட்டா, அல்பா மற்றும் அல்பா பிளஸ் டிரிம்களிலும் இதே அம்சம் இடம் பெற்றிருக்கும். நெக்சா வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் காரணமாக, ஏற்கெனவே இருந்த ஷோரூம் விலையை விட சுமார் 0.8 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எக்ஸ்எல்6 ஷோரூம் விலை சுமார் ரூ.11.83 லட்சம் முதல் ரூ.14.83 லட்சம் வரை உள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சம் மூலம் வேரியண்ட்டுகளுக்கு ஏற்ப விலை மேலும் ரூ.9,500 முதல் ரூ.12,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சங்களில் 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ரிமைண்டர்கள், பிரேக் அசிஸ்ட், டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி, 360 டிகிரி கேமரா ஆகியைவயும் அடங்கும். இருப்பினும் இந்த அம்சங்களில் ஒரு சில டாப் வேரியண்டில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்எல் 6 காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 103 எச்பி பவரையும், 137 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஜெட்டா வேரியண்ட் சிஎன்ஜியிலும் கிடைக்கும்.