தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்..!!

சென்னை: நாளை மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மருது பாண்டியர்களின் நினைவு நாளான 24.10.2025 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். விருதுநகர் மாவட்டம், அழகாபுரி முக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் - பொன்னாத்தாள் தம்பதியினரின் மகன்களாக 1748 ஆம் ஆண்டு பெரியமருதும், 1753 ஆம் ஆண்டு சின்னமருதும் பிறந்தார்கள்.

Advertisement

மருது பாண்டியர்கள் படைக்கலப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள்.அப்போது தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த உறுதியான ஆற்காடு நாணயத்தைத் தம் கை விரல்களினால் வளைக்கக்கூடிய வலிமை பெற்றவராக பெரியமருது விளங்கினார். அக்காலத்தில் வளரி என்ற ஆயுதம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இவ்வாயுதம் எதிரியைத் தாக்கி வீழ்த்திவிட்டு மீண்டும் எறிந்தவரிடமே திரும்பி வரும் ஆற்றல் வாய்ந்தது. இத்தைகைய பயங்கரமான வளரி ஆயுதத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதில் மருது பாண்டியர்கள் சிறந்து விளங்கினர். இராமநாதபுரம் ஜமீனில் இருந்து பிரிந்து, சிவகங்கைச் சீமை 22.1.1730 அன்று தனியே உருவாயிற்று. அதன் முதல் அரசர் சசிவர்ணத் தேவர். அவருக்குப் பின், அவர் மைந்தர் முத்து வடுகநாதர் என்ற பெரிய உடையத் தேவர் 1750 முதல் 1772 வரை சிவகங்கை மன்னராக விளங்கினார். அவரது மனைவிதான் வீரமங்கை வேலு நாச்சியார். அப்பொழுது, மருதுபாண்டியர்கள் அரண்மனையில் பணியாளர்களாக சேர்ந்தனர்.

பெரிய மருது வேட்டையாடுவதில் சூரர். ஒருமுறை முத்துவடுகநாதர் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். துணைக்கு மருது சகோதரர்கள் உடன் சென்றிருந்தனர். அப்பொழுது புலியொன்று முத்துவடுகநாதர் மீது பாய்ந்தது. புலியிடமிருந்து மன்னர் முத்துவடுகநாதரைப் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் காத்தனர். அதனால், முத்துவடுகநாதர் மருது சகோதரர்கள் மீது அன்பு கொண்டு, அவர்களைப் படைத்தளபதிகளாக நியமித்தார்.வீர தீரச் செயல்களில் சிறந்தவர்களைப், 'பாண்டியர்' என அடைமொழியிட்டு அழைப்பது தென் தமிழ்நாட்டில் அந்நாள் வழக்கம். எனவே, வீரத்தில் சிறந்து, தீரச் செயல்கள் புரிந்துவந்த மருது சகோதரர்கள் இருவரும் 'மருதுபாண்டியர்' என மக்களால் அழைக்கப்பட்டனர். 26.5.1772 அன்று ஆற்காடு நவாப்பிற்கு சிவகங்கை மன்னர் கப்பம் செலுத்தாத காரணத்தினால் அவர் மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சிவகங்கை நவாப்பின் படைகளும், கம்பெனி படைகளும் சேர்ந்து சிவகங்கை மன்னரைத் தாக்கினர். இப்போரில் மன்னர் முத்து வடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு வீரமங்கை ராணி வேலுநாச்சியார். மருதுபாண்டியர்கள், ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் உதவியுடன் சிவகங்கை ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தமது படையைச் சேர்ந்த 500 வீரர்களை அனுப்பி உதவி செய்தார். வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பிப் பிழைத்த வீரர்கள் காளையார்கோவிலில் உள்ள காட்டில் மறைந்து வாழ்ந்தனர். இதனால் ஆங்கிலேயருடன் நேரடிப் போர் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மேலும் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய ஊமைத்துரை தப்பிய சின்னமருதுவின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.

16.6.1801 அன்று சின்ன மருதுவால் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதன் அறிக்கையின் நகல்கள் திருச்சி, திருவரங்கம் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள சாதி, மத வேற்றுமையை மறந்து நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராட வேண்டும் எனவும், மரணத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயப் போரின் முடிவில் மருதுபாண்டியர்களைச் சிறைப்பிடிக்க ஆங்கிலேயரால் உத்தரவிடப்பட்டது. 19.10.1801 அன்று சோழபுரம் காட்டில் மருது பாண்டியர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் 24.10.1801 அன்று . அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்

மருது பாண்டியர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில். தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலைகள், முதலமைச்சரால், 14.2.2023 அன்று திறந்து வைக்கப்பட்டன. ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் நாள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மருதுபாண்டியர் நினைவு நாளான 24.10.2025 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில், மேயர். நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement