முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மருது அழகுராஜ்
சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஆக்கிரமித்துள்ளார். ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றை தலைமை ஜனநாயகத்துக்கு எதிரானது. எடப்பாடி அவமதிப்பு அரசியலை செய்கிறார். அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைப்பு அரசியலில் இணைந்துள்ளேன். திமுகவில் உழைக்க வந்துள்ளேன்; இன்னும் பல பேர் திமுகவில் இணைய உள்ளனர்
Advertisement
Advertisement