2வது திருமணத்துக்கு தோஷம் நீங்க நடிகை சமந்தா சிறப்பு பூஜை
சென்னை: காதலரை 2வதாக திருமணம் செய்ய தோஷம் இருப்பதாகவும் அது நீங்க நடிகை சமந்தா சிறப்பு பூஜை மேற்கொண்டார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இந்தியில் பேமிலிமேன் 2 வெப்சீரிஸிலும் சிட்டாடல் என்ற வெப்சீரிஸிலும் சமந்தா நடித்தார். இந்த 2 வெப்சீரிஸ்களையும் ராஜ் நிடிமொரு இயக்கினார். அப்போது சமந்தாவுக்கும் ராஜ் நிடிமொருவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 50 வயதாகும் ராஜ் நிடிமொரு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சமந்தாவை மணக்க இருக்கிறார்.
இந்நிலையில் ராஜ் நிடிமொரு குடும்பத்தார், சமந்தாவின் ஜாதகத்தை பார்த்துள்ளனர். 2வது திருமணம் செய்வதில் சமந்தாவுக்கு தோஷம் இருப்பதாகவும் அது நீங்க அவர் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் ஜோதிடர் ஒருவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிலேயே இந்த சிறப்பு பூஜையை நேற்று சமந்தா மேற்கொண்டார். மேலும் சில கோயில்களுக்கு செல்லவும் சமந்தா திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் சமந்தா, ராஜ் நிடிமொரு திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.