மரோஸான் போராடி தோல்வி: சீன ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஜானிக் சின்னர்
பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), ஹங்கேரி வீரர் ஃபேபியன் மரோஸான் (25) உடன் மோதினார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சின்னர், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அடுத்த செட்டில் மரோஸான் துடிப்புடன் ஆடியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. அந்த செட்டை, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26), செக் வீரர் ஜாகுப் மென்சிக் (20) மோதினர். அந்த போட்டியில் மென்சிக் காயமடைந்து பாதியில் வெளியேறியதால், டிமினார் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
Advertisement
Advertisement