மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியையொட்டி சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிப்பு
Advertisement
டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்றும், இன்று பிற்பகல் 1:45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 2, 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement