மெரினா கடலில் கர்நாடக மாணவர்கள் அலையில் சிக்கினர்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட அலையில் ரினிஷ் (21), அசோக்குமார் (20), சச்சின் (21) ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்து அருகில் இருந்த மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு 3 கர்நாடக மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்ததால் அனைத்து மாணவர்களும் உயிர்தப்பினர். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement