சிவகங்கை: போலி முகவரியைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கிய வழக்கில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷுக்கு ஆயுள் தண்டனை, ரூ.31,000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கேரள சிறையில் இருந்த ரூபேஷ் இன்று பலத்த பாதுகாப்புடன் சிவகங்கை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். 8 பிரிவுகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இவர் மீது கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.