தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்வளத்தை மேம்படுத்தும் நுண்ணுயிரிகள்!

சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். இந்த சொற்றொடரில் பொதிந்திருக்கும் தத்துவம் மனித உடலுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ! விவசாயத் தொழிலுக்கு 100 சதவீதம் பொருந்தும். ஆம். நல்ல வளமான மண் இருந்தால் மட்டுமே நாம் லாபகரமான விவசாயத்தை சாத்தியப்படுத்த முடியும். மண் என்பது கோடிக்கணக்கான நுண்ணுயிர்களின் வாழ்விடம். இந்த நுண்ணுயிர்களின் செயல்பாடே மண்ணின் வளத்தை உறுதி செய்கிறது. இத்தகைய நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா. சில பத்தாண்டு காலத்திற்கு முன்பு கூட நமது மண்ணில் கரிமச்சத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. நன்மை தரும் நுண்ணுயிரிகளும் நன்மை தரும் பூச்சிகளும் அதிகமான அளவில் வாழ்ந்தன. அதனால் பயிர்கள் வளமாகவும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாமலும் இருந்தன.

Advertisement

இடுபொருள் செலவு ஏதுமின்றி விவசாயம் செழிப்பாக நடந்து வந்தது. அதன்பிறகு ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் மண்ணில் கரிமச்சத்து குறைந்தது. இதனால் நன்மை தரும் உயிரினங்களும் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. பாரம்பரிய பயிர் ரகங்களுக்கு மாற்றாக உயர் விளைச்சல் ரகங்கள் என்ற பெயரில் சில ரகங்கள் விவசாயத்தில் புகுத்தப்பட்டன. தற்சார்பு வேளாண்மை படிப்படியாக மறையத் தொடங்கியது. இதனால் மண் தனது இயல்பான வளத்தை பெருமளவில் இழந்து வருகிறது. வளமற்ற மண்ணில் விளையும் பயிர்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் ஆளாகி வருகின்றன. ரசாயன பயன்பாட்டில் விளைந்த பயிர்களை உட்கொள்ளும் நாம் நமது ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பித்திருக்கிறோம். கால்நடைகளின் கதையும் இதுதான்.

மண்ணின் வளத்தை மீட்டெடுத்து ஆரோக்கியமான விவசாயத்தை மீண்டும் கொண்டுவர ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதுதான் சிறந்த வழி. இதன்மூலம் மண்ணில் கரிமச்சத்தின் அளவை அதிகரித்து, நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யலாம். இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது இயற்கை வழி வேளாண்மைதான். இதில்தான் பயிர்களுக்குத் தேவையான பலவித சத்துகள் இயற்கை முறையில் எளிதில் கிடைக்கும். ரசாயனம் தவிர்த்த இயற்கை வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்றாகப் பெருக்கம் அடையும். பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் வேர்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்வதற்கு இந்த நுண்ணுயிர்கள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

பயிர்களுக்கான பலவித சத்துகள்

பயிர்களின் அடிப்படை கட்டமைப்புக்கு இன்றியமையாத சத்துகள் முதன்மை சத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகும். இந்த சத்துகளை பயிர்கள் நீர் மற்றும் காற்றில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கும், விளைச்சலுக்கும் அதிகளவு தேவைப்படும் சத்துகள் பேரூட்ட சத்துகள் எனப்படுகின்றன. அவை தழைச்சத்து (ஹைட்ரஜன்), மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாஷ்) என்பவைதான். பயிர்களுக்கு மத்திம அளவில் தேவைப்படும் சத்துகள் 2ம் நிலைச் சத்துகள் எனப்படுகின்றன. அவை சுண்ணாம்பு சத்து (கால்சியம்), மெக்னீசியம், கந்தகசத்து (சல்பர்) ஆகியவை. பயிர்களுக்கு குறைவான விகிதத்தில் தேவைப்படும் சத்துகள் நுண்ணூட்ட சத்துகள் ஆகும். இவை விகிதாச்சார அடிப்படையில் குறைவாக தேவைப்பட்டாலும் பயிர் விளைச்சலிலும் அதன் பண்புகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை துத்தநாக சத்து (ஜிங்க்), தாமிரசத்து (காப்பர்), போரான், இரும்பு, மாங்கனீசு, மாலிப்டினம் பலவித சத்துகளாக பயிர்களுக்கு தேவைப்படுகின்றன.

ஒரு கைப்பிடியில் பல கோடி நுண்ணுயிர்கள்

மனிதனின் கண்களுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களே நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு கைப்பிடி மண்ணில் பல கோடி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவை பாக்டீரியாக்கள், பூஞ்சாணங்கள், வைரஸ்கள், நூற்புழுக்கள், ஆக்டினோமை சிஸ்கள் மற்றும் பல வகைகளில் உள்ளன. பயிர்கள் வேர்களின் மூலமாக தண்ணீரையும், அதில் கரைந்துள்ள சத்துகளையும் உறிஞ்சி வளர்கின்றன. மண்ணில் உள்ள சத்துகளை உடைத்து நீரில் கரையும் வண்ணம் மாற்றித் தரும் பணியை நுண்ணுயிரிகள் செய்கின்றன.

நுண்ணுயிர்களின் செயல்பாடுகள்

மண்ணில் சத்துகள் அதிகம் இருந்தும், அதை பயிர்கள் உட்கொள்ளும் வண்ணம் கரைத்து தர நுண்ணுயிர்கள் இல்லையென்றால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். அந்த வகையில் மண்ணில் உள்ள சத்துக்களை பயிர்களுக்கு கரைத்து கொடுப்பது நுண்ணுயிரிகளின் பணியாகும். நுண்ணுயிர்கள் பல நன்மை தரும் செயல்பாடுகளை செய்கின்றன. தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் நுண்ணுயிர்கள், சத்துகளை கரைத்து பயிருக்கு கொடுக்கும் நுண்ணுயிர்கள், நோய்க் கிருமிகளை அழிக்கும் நுண்ணுயிர்கள், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் நுண்ணுயிர்கள், நூற்புழுக்களை அழிக்கும் நுண்ணுயிர்கள் என பல நுண்ணுயிர்கள் விவசாயத்தில் முக்கியமான பணிகளை மேற்கொள்கின்றன.

மண்ணில் தேவையான அளவு

சத்துகள் இல்லாமல் போனாலும் பயிர் களில் சத்துக் குறைபாடு ஏற்படும். சத்துக்கள் இருந்து அதை கரைக்கச் செய்யும் நுண்ணுயிர்கள் இல்லாமல் போனாலும் சத்து குறைபாடு ஏற்படும். அவ்வாறு சத்து குறைபாடு உள்ள பயிர்கள் எளிதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து மானிய விலையில் விநியோகிக்கப்படும் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்தி மண்ணின் தரத்தினை மேம்படுத்துவது தற்போதைய சூழலில் இன்றியமையாததாகும். இயற்கை வழி வேளாண்மையில் நோயில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வருமுன் காப்பதே சிறந்தது.

தொடர்புக்கு: பொ.சுஜாதா வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர்:94430 99945.

 

Advertisement

Related News