மனுஷி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்க ஆணை
சென்னை: மனுஷி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும் மாற்றியமைக்கவும் வசனங்களை நீக்கவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காட்சிகளை நீக்கி மாற்றியமைத்து 2 வாரத்தில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என மனுஷி படத்தை தயாரித்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பித்த 2 வாரங்களில் சான்று வழங்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுஷி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement