‘மனுஷி' படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட உள்ளார்!
சென்னை : 'மனுஷி' படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட உள்ளார். படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கோரியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா? என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement