அரிமளம் பகுதியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!
Advertisement
புதுக்கோட்டை: அரிமளம் பகுதியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீர் முகமது (48) என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறையுடன் ரூ.30,000 அபராதம் விதித்தது புதுக்கோட்டை நீதிமன்றம். பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement